Saturday, November 14, 2009

மொழியில்லா நம் காதல்...

கடற்கரை மணலிற்...
உன்முகம் பார்த்தபடி நானும்...
என்முகம் பார்த்தபடி நீயும்...
அமர்கிறோம் நாம்...

மொழியில்லா உலகில்
சிக்கி கொண்ட நம் வார்த்தைகள்
மௌனகீதம் வாசிக்க
எங்கிருந்தோ வந்த குயிலின் இன்னிசை..
கலைக்கிறது நம்மௌனத்தை...
அழைக்கிறது அதன் கானம் கேட்க...

உன்னை தழுவிய
என் விழிகள் நகர தொடங்க
நம்மை படர்கிறது காரிருள்....
உன் கைபற்ற எண்ணி நீண்ட கைகள்
காற்றின் வெற்றுடல் உரசி தோய்கின்றன....

மாய குயிலின் குரல் காதை பிளக்க
திசை நோக்கி திரும்பினேன் நான்...
மென்னொலியில் சினுங்கிய
கைபேசி உரைத்தது உண்மையை.....
அலறியது அலாரம்....

அரங்கேறியது கனவில் நாடகம்.....
ஈரம் உலர்ந்து
விரைத்த தலையணையும்
தடித்த கண் இமைகளும்...
உணர்த்தியது நம் நேற்றைய பிரிவை.....
நீயில்லை என்ற இன்றைய நிதர்சணத்தை..
நிஜம் அறியாமல்
என் காலை விடியலும் தொடங்க...
கண்ணீருடன்
என் காலங்களும் தொடர்கின்றன.....

இரயில் பயணம்...

சில்லென்ற காற்று
சிகையை கோத

இனிய கானம்
இதயம் வருட...

என்னை மறந்து
உன் நினைவுகள் சுமந்து..

நான் பயணிக்கும்..
இரயில்பயணம்...

தந்துவிட்டு
செல்கிறது...

இத்ழ்களில்
மௌன புன்னகையும்...

இதயத்தில்
ஏக்க தூரல்களையும்....

என் விழிகளில்...

♥♥♥♥♥
உறக்கத்தில்
மூடிய இமைக்குள் நீ
கனவுகளாக
விழித்திருக்கையில்
விழி திரைக்குள் நீ
நினைவுகளாக....
நொடிபொழுதும்
பிரியாமல்
தொடர்கிறாய்
நிழற்போல..
நிஜமாய்
நீ என்னை
சேர்வது
எப்போது....
என் காதல்
அதை நான் சொல்வதும்
எப்போது....
♥♥♥♥♥

உனக்கான என் மொழிகள்...

♥♥♥♥♥
உன்னுடன்
பேச துடிக்கும்
என் இதழ்களில்
காணவில்லை
உனக்கான
என் வார்த்தைகளை...
தொண்டைக்கடியில்
சரிந்து விழுதனவோ...
உன்னை கண்டுவிட்ட
மயக்கத்தில்....

♥♥♥♥♥
கவிதையாய்
சொற்க்கள் சேர்த்து
கோர்வையாய்
வார்த்தைகள் தரித்து
இதமாய்
இதயத்தில் பதுக்கி
செதுக்கிறேன்
உனக்கான என் மொழிகளை...
நினைவுகளில்
உன்னை காணும்போது
முட்டி மோதி
முன்வரும் வார்த்தைகள்
நிஜமாய்
நீ வருகையில்
தயங்கி நின்று
பின் மறைகிறது
அது ஏனோ??

Thursday, November 12, 2009

மாலை பொழுதுகளும் என் தனிமைகளும்...

காற்றில் சலசலக்கும்
தென்னங்கீற்றின் இலையோசை...

தூரத்தில் ஒலிக்கும்
குயிலின் இன்னிசை....

சுவாசத்தில் மிதந்து வரும்
முதற்மழையின் மண்வாசனை....

உன் நினைவுகளில் மூழ்கி இருக்கும்
என் இதய வாசலில் உன் வாசனை....

உடற் உரசி செல்லும் குளிர்க்காற்று....
உயிர் உரசி செல்லும் உன் நினைவுகள்.....

மாலைகதிரவனின் மஞ்சள் வெயில்
மயக்கும் மல்லி வாசத்தில் கலந்து நிற்கும் உன் நினைவுகள்...

தொட முடியா தொலைவில் நீ....
தொடும் தூரத்தில் எப்பொதும் உன் நினைவுகள்.....

 நீ சென்ற திசை பார்த்து
தவம் இருக்கும் என் கண்கள்.....

நீ வரும் திசை நோக்கி
துடித்திருக்கும் என் இதயம்......

இந்த மாலைதனிமைகளில்
உன் நினைவுகள் சேர்த்து....
காத்திருக்கிறேன்.....
வருவாயா என் உயிரே...

உன் கைகளில் தவழும் என் கவி குழந்தைகள்....

வெற்று காகிதங்களில்
கவிதைகள் வடித்தேன்
உனக்காக.....

கவிதை வரிகளில்
உன்னை சுமந்து...
உயிர்பெறுகின்றன...
புதிதாய் ஜனித்த
புது கர்வத்துடன்.....

உன் கைப்பிடியின்
ஸ்பரிசத்தில்
குழைகின்றன
வண்ணங்கள் ஏறி
வெட்கத்துடன்....

உன் கருவிழிக்குள்
விழுந்து
மிளிர்கின்றன...
புது மணப்பெண்ணின்
அழகுடன்.....

உன் இதழ்களுக்குள்
இணைந்து
கவி பாடுகின்றன
கோடைமழையின்
குதுகலத்துடன்....

உன் சுவாசகாற்றில்
நுழைந்து
உன் இதயத்துள்
நிலைக்கின்றன
நிறைவான
காதலுடன்....

பகல் இரவுகளை இரவல் வாங்கி
அல்லும் பகலும் உன் நினைவுகள் சுமந்து...
நித்திரை தொலைத்து...
கவி வடித்தவள் நான்.....
நீ ரசித்து வருடுவது
என் கவிதைகளையா??...