கடற்கரை மணலிற்...
உன்முகம் பார்த்தபடி நானும்...
என்முகம் பார்த்தபடி நீயும்...
அமர்கிறோம் நாம்...
மொழியில்லா உலகில்
சிக்கி கொண்ட நம் வார்த்தைகள்
மௌனகீதம் வாசிக்க
எங்கிருந்தோ வந்த குயிலின் இன்னிசை..
கலைக்கிறது நம்மௌனத்தை...
அழைக்கிறது அதன் கானம் கேட்க...
உன்னை தழுவிய
என் விழிகள் நகர தொடங்க
நம்மை படர்கிறது காரிருள்....
உன் கைபற்ற எண்ணி நீண்ட கைகள்
காற்றின் வெற்றுடல் உரசி தோய்கின்றன....
மாய குயிலின் குரல் காதை பிளக்க
திசை நோக்கி திரும்பினேன் நான்...
மென்னொலியில் சினுங்கிய
கைபேசி உரைத்தது உண்மையை.....
அலறியது அலாரம்....
அரங்கேறியது கனவில் நாடகம்.....
ஈரம் உலர்ந்து
விரைத்த தலையணையும்
தடித்த கண் இமைகளும்...
உணர்த்தியது நம் நேற்றைய பிரிவை.....
நீயில்லை என்ற இன்றைய நிதர்சணத்தை..
நிஜம் அறியாமல்
என் காலை விடியலும் தொடங்க...
கண்ணீருடன்
என் காலங்களும் தொடர்கின்றன.....